ஆரோக்கியமான தூக்கத்திற்கு அருமையான ஆலோசனைகள்!

* பகலில் தூங்கக் கூடாது. தூங்கினால் கொழுப்புச் சத்து அதிகமாகும். இரவு தூங்காவிடில் கொழுப்புச் சத்து குறையும். தேகம் மெலியும். நரம்புத்தளர்ச்சி, நரம்பு தொடர்புடைய நோய்கள் ஏற்படும்.
* இரவில் படுப்பதற்கு முன் வாயகன்ற பேசின் போன்றவற்றில் தாங்கும் அளவு சூடான வெந்நீரை ஊற்றி அதில் கொஞ்ச நேரம் இரு கால்களையும் வைத்திருந்து பின் அந்த தண்ணீரில் நன்றாக கால்களை கழுவி துடைத்து பின் படுத்தால் ஆழ்ந்த நிம்மிதியான உறக்கம் வரும்.
* மருதாணி சிறந்த மருத்துவ குணமுடைய மூலிகை ஆகும். இதன் இலை, காய், பூ அனைத்துமே மருத்துவ குணங்களை உடையது. இரவில் தலையனையின் கீழ் சில மருதாணி பூக் கொத்துக்களை பறித்து வைத்துக் கொண்டு படுத்தால் நல்ல தூக்கம் நம்மை அரவணைக்கும்.
* படுக்கச் செல்லும் முன் சின்ன வெங்காயத்தை நசுக்கி முகர்ந்து பார்த்தால் நல்ல தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராமல் இருந்தால் சில வெங்காயங்களை நெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீரையும் குடிக்க தூக்கம் தானே வரும்.
* அறையில் உள்ள விளக்குகள் கண்களை உறுத்தாதபடி இருக்க வேண்டும். வெளிச்சத்தின் அளவைப் பொறுத்து சில சுரப்பிகள் சில ரசாயனங்களைச் சுரப்பதால் இரவு நேர ஓய்வுக்கு மூளை தன்னை விரைவில் தயார்படுத்திவிடும். இருட்டே நல்ல தூக்கத்தை தரும்.
* மனக்கவலை, துன்பங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு ஆழ்ந்த மூச்சு விட்டுக் கொண்டு உடம்பை லேசாக்கினாற்போல் தளர்த்திக் கொண்டு கண்களை மூடினால் தூக்கம் சீக்கிரம் வந்து விடும்.
* மொபைல், டிவி, கணினி அனைத்தும் உடலை சூடாக்கும், அந்த சூடு தணிந்து கண்கள் அவ்வளவு சுலபமாக தூக்கம் வராது. எனவே உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் அனைத்து எலக்ட்ரானிக் கருவி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும்.
* சூடான நீரில் சிறிது சீரகம் போட்டுக் குடிக்கலாம். அல்லது பாலில் மஞ்சள் கலந்து குடிக்கவும் நல்ல உறக்கம் வரும். அத்துடன் வெள்ளைப்பூண்டு நசுக்கி போட்டுக் குடிக்க இன்னும் பலன் அதிகமாகும்.
* அதிகம் மசாலா நிறைய உணவுகளை தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு தவிர்க்க வேண்டும். கூடுமானவரை இரவில் அதிக எண்ணெய், மசால் , துரித உணவுகள் தூக்கத்தைக் கெடுக்கும்.
* மது, புகை இவையும் நம் தூக்கத்தை முற்றிலும் கெடுக்கக் கூடியவை. இவற்றை தவிர்க்கவும் பழக்க வேண்டும்.
* சமீபகாலமாக ரீல்ஸ், ஷார்ட்ஸ் என கண்களை மூடும் வரை பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்ப்பது மூளைக்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. தூக்கமும் ஆரோக்கியமாக இருக்கும்.
* அதிகாலையில் 6 மணிக்கு மேல் படுக்கையில் இருப்பதைத் தவிர்த்தால் , சீக்கிரம் தூங்கும் பழக்கமும் அதிகரிக்கும்.
* எழுந்தவுடன் சூடான நீர் அதில் எலுமிச்சைச் சாறு, புதினாவுடன் ஒரு டி-டாக்ஸ் பானம் அருந்தி விட்டு 30 நிமிடங்கள் நடந்தால் உடலின் பாதி பிரச்னைகள் சீராகி தூக்கம் வசப்படும்.
* நார்ச்சத்து நிறைந்த காய்கள், பழங்கள், கிழங்குகளான சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு இவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து, புரதம் , கால்சியம், வைட்டமின் நிறைந்த உணவுகளும் மந்த நிலையை போக்கி உடலை சுறுசுறுப்பாக்கும். இது பகல் தூக்கத்தைப் போக்கி இரவு நேரத் தூக்கத்தை மேம்படுத்தும்.
* உடலுக்கு தேவையான நீர் அவசியம். உங்கள் எடைக்கு ஏற்ப போதுமான நீர் குடிப்பதும் அவசியம்.
* பொதுவாக கோடை காலத்தில் உடல் சூடு தணிந்து தூக்கம் வர வேண்டும், குளிர் காலத்தில் உடல் குளிர் தணிந்து தூக்கம் வர வேண்டும். இதற்கு சரியான நேரத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்கச் செல்ல வேண்டும்.
* மாதவிடாய் காலங்களில் தரமான சானிட்டரி பேட்கள், நல்ல ஊட்டச்சத்து ஆகாரங்கள் உடலை அமைதியாக்கி தூக்கம் வரவைக்கும்.
– எல், நஞ்சன், முக்கிமலை

Related Stories: