சென்னை காவல்துறையின் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் டெண்டருக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!

சென்னை: சென்னை காவல்துறையின் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் டெண்டருக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த பேட்ரியா செக்யூரஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான ரூ.5 கோடி மதிப்பிலான டெண்டரை அக்டோபர் 29ல் காவல் ஆணையம் வெளியிட்டது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான டெண்டர் காலம் டிச.30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: