திருவள்ளூர், மார்ச் 29: திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட, வட்டார அளவில் வாடஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினாலும் தனி அலுவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருவதாலும் குடிநீர் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் கீழ்க்கண்ட விவரப்படி வாட்ஸ் அப் எண். தொடங்கப்பட்டுள்ளது. அத்தகைய வாட்ஸ்அப் எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் தொடர்பான புகார்கள் மட்டும் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் போது புகார்தாரரின் பெயர் (ம) முகவரியுடன் புகார்கள் தெரிவிக்க வேண்டும் . குடிநீர் தொடர்பாக மாவட்ட அளவிலான உதவி மைய எண்: 9445346311, வட்டார அளவிலான உதவி மைய எண்கள்: எல்லாபுரம் – 7708269571, கும்மிடிப்பூண்டி – 7548801201, கடம்பத்தூர் – 7305921319, மீஞ்சூர் – 7904665459, பள்ளிப்பட்டு – 8220804959, பூந்தமல்லி – 7010044876, பூண்டி – 6385348540, புழல் – 7010559670, இரா.கி.பேட்டை – 7708736007, சோழவரம் – 7558198922, திருத்தணி – 7904996062, திருவாலங்காடு – 7550177471, திருவள்ளூர் – 7550147704, வில்லிவாக்கம் – 7540028312 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் புகாருக்கு மாவட்ட, வட்டார அளவில் வாட்ஸ்அப் எண்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.