₹2.46 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

நாமகிரிப்பேட்டை, மார்ச் 29: நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று இ-ஏலம் மூலம் கொப்பரை விற்பனை நடந்தது. இதில், 42 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் 100 கிலோ கொண்ட மூட்டை அதிகபட்சமாக ₹17,899க்கும், குறைந்தபட்சமாக ₹16,888க்கும், சராசரியாக ₹17,699க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் அதிகபட்சமாக 100 கிலோ கொண்ட மூட்டை ₹15,677க்கும், குறைந்தபட்சம் ₹12,599க்கும் விற்னையானது. விற்பனைக்கு வந்த 42 மூட்டை மொத்தமாக ₹2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனையானது.

The post ₹2.46 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: