புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார்
₹2.46 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
நாமக்கல்: கொலை வழக்கில் 4 பேர் கைது
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பள்ளி மாணவி: டிரைவர், கண்டக்டர் கைது
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
நாமகிரிப்பேட்டை அருகே சூறாவளி காற்றுக்கு 2 ஆயிரம் வாழைமரங்கள் முறிந்து நாசம்: நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை
ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வேன் மோதியதில் தலைமைக் காவலர் உயிரிழப்பு