மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 163 ஆக உயர்வு: மீட்பு பணிகள் தீவிரம்

நைபியிடவ்: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் காரணமாக மியான்மர், தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 7.7 ரிக்டர் திறன் கொண்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வழிபாட்டு தலங்கள் இடிந்தன. மீண்டும் சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

வியட்நாம், மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அவசர நிலை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வு தாய்லாந்து முழுவதும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரழிவு தடுப்புத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 350 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நீடிக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் அடைந்துள்ளனர்.

The post மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 163 ஆக உயர்வு: மீட்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: