ஆக்கபூர்வமான அரசியல் செய்யுங்கள், வீண் புரளி கிளப்ப வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: ஆக்கபூர்வமான அரசியல் செய்யுங்கள், வீண் புரளி கிளப்ப வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் வந்து குவிகின்றன. தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா – குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி – மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா?. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி, மக்களைக் குழப்பவும் – திசைதிருப்பவும் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன என முதல்வர் பதிவிட்டுள்ளார்.

The post ஆக்கபூர்வமான அரசியல் செய்யுங்கள், வீண் புரளி கிளப்ப வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: