நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மணிப்பூர் எல்லையில் அமைந்துள்ள மியான்மர் நாட்டில் இன்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்கள் சீட்டு கட்டுகளை போன்று சரிந்தன. வீடுகளிலும், தொழில் நிறுவனங்களில் இருந்தும் மக்கள் தப்பியோடினர். நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது மியான்மரில் அமைந்திருந்தாலும், அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மியான்மரில் அடுத்தடுத்து 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மியான்மரில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். நகரப் பகுதியில் வசித்த மக்கள் பெரும் பீதியடைந்தனர். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், மியான்மரின் மண்டலேயில் அமைந்துள்ள அவா பாலம், சாகைங் அருகே அமைந்துள்ள மிகப்பெரிய கட்டிடங்கள் நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்தன. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 43 பேர் மாயம் அடைந்தனர். மியான்மரில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மியான்மரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை. நிலைமையைச் சமாளிக்கத் தாய்லாந்து அமைச்சரவை அவசரக் கூட்டம் நடத்தப்படுகிறது.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு அரசு அவசர நிலை அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வு தாய்லாந்து முழுவதும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரழிவு தடுப்புத் துறை அறிவித்துள்ளது. மீட்பு பணி குறித்து விவாதிக்க தாய்லாந்து பிரதமர் சினா வர்த்ரா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிலநடுக்க நிவாரண பணிகளில் மியான்மர், தாய்லாந்துக்கு இந்தியா உதவ தயார்; மியான்மர், தாய்லாந்துடன் இந்திய வெளியுறவுத்துறை தொடர்பில் இருப்பதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: