முசிறி, மார்ச் 28: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் பதட்டமான இடங்கள் குறித்து மத்திய அதி விரைவு படையினர் ஆய்வு நடத்தினர். காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு கூடுதல் கமாண்டோ ஜின்சி பிலிப் தலைமையிலான மத்திய அதி விரைவு படையினர் சென்று காட்டுப்புத்தூர் பகுதியில் சாதி, மத, கலவரங்களின் போது ஏற்படும் மோதல்களை தடுப்பது, பாதுகாப்பு மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் மத்திய அதி விரைவு படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் பதட்டமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்தின் வரைபடம் சேகரித்து அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது, பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அறிக்கை தயார் செய்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர். இதனடிப்படையில் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
The post காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் மத்திய அதி விரைவு படையினர் ஆய்வு appeared first on Dinakaran.