மேலும் அவர், ரன்யா ராவ் மூலம் தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய்க்கு தங்கம் கடத்தி வந்துள்ளார். அதாவது ரன்யா ராவுக்கு சொந்தமான நகைக்கடை துபாயில் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் உள்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று துபாய் நகைக்கடைக்கு தங்கத்தை கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பெங்களூருவுக்கு நடிகை ரன்யா ராவ் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரன்யா ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை பெங்களூரு செச ன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
* நகைக்கடை உரிமையாளர் கைது
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில், ரன்யா ராவ், அவரது முன்னாள் காதலன் தருண் ராஜு ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சாஹில் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாஹில் ஜெயின் பெங்களூருவிலும் ஒரு நகைக்கடை நடத்தி வருகிறார். ரன்யா ராவ் கடத்திவரும் தங்கக்கட்டிகளை வாங்கி உருக்கி பயன்படுத்தி வந்த சாஹில் ஜெயின், அதற்காக ரன்யா ராவிற்கு 10-15 சதவீதம் கமிஷன் கொடுத்து வந்திருக்கிறார். ரன்யா ராவ் மற்றும் அவரது முன்னாள் காதலன் தருண் ராஜூ ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் சாஹில் ஜெயின் குறித்து தெரியவர, அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post தென்னாப்பிரிக்காவில் வாங்கி துபாய் வழியாக தங்கம் கடத்திய ரன்யா ராவ்: விசாரணை அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.