கடிதப் பரிமாற்றம் தான் நடக்கிறதே தவிர மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை: மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு

டெல்லி: 2022-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 268 மீனவர்களில் 229 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 39 பேர் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்:
2024-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 564 மீனவர்களில் 546 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2025-ல் 147 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் 135 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 10 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 2024-ல் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 524 பேரில் 501 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். 2025-ல் கைது செய்யப்பட்ட 135 தமிழ்நாட்டு மீனவர்களில் 76 பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைடு செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மீனவர்கள் கவனக்குறைவாகவே எல்லையை தாண்டி செல்கின்றனர், வேண்டுமென்றே செல்லவில்லை. தமிழ்நாட்டு மீன்வர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மட்டுமின்றி தாக்குதல் நடத்தி மீன்களையும் அபகரிக்கின்றனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கடிதப் பரிமாற்றம் தான் நடக்கிறதே தவிர மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என திருச்சி சிவா கூறினார்.

The post கடிதப் பரிமாற்றம் தான் நடக்கிறதே தவிர மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை: மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: