சென்னை: தனது மாநில எல்லைக்குள் இருக்கு மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வரலாமே? என ஆன்லைன் ரம்மி வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசு வகுத்த விதிமுறைகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ப்ளே கேம்ஸ் 24*7, ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் பிளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது; பல ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கும் நிலையில் ரம்மியை மட்டும் அரசு ஒழுங்குபடுத்தியுள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடக் கூடாது என்பது தங்களை கடுமையாக பாதிக்கும். தொழில் செய்யும் உரிமையை பாதிப்பது போல் ஒழுங்குபடுத்தும் விதிகள் உள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளில் தோல்வி அடையும் ஒருவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆன்லைன் விளையாட்டுகளில் சில மட்டுமே அடிமைப்படுத்தும் வகையில் உள்ளன. அடிமைப்படுத்தும் விளையாட்டுகளை மட்டுமே மாநில அரசு கட்டுப்படுத்த நினைப்பதாக நீதிபதிகள் கருத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் மதுபானம் விற்க கூட நேரக் கட்டுப்பாடு உள்ளதாகக் கூறி வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.
The post மக்களை பாதுகாக்க அரசு சட்டம் கொண்டு வரலாமே?.. ஆன்லைன் ரம்மி வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.
