இது குறித்து தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.கே. நவாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வரால் இன்று கொண்டுவரப்பட்ட ஒன்றிய அரசின் வக்பு மசோதாவை எதிர்த்து இன்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது அவருடைய தனித்தன்மையையும் சிறுபான்மை மக்களின் உண்மையான நண்பர் என்று நிரூபித்து விட்டார். நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த கொடுமையான சட்டத்தை விட மிக கொடுமையான கொலைகார சட்டத்தை ஒன்றிய அரசு மோடியின் அரசு கொண்டுவந்துள்ளது திருத்தம் என்ற பெயரில் அவருடைய திருத்தமே வக்பு சட்டத்தை அடிப்படையிலேயே காலி செய்யும் ஒரு திருத்தம் ஆகும்.
மதசார்பற்ற நாட்டில் சிறுபான்மையினரை பல வழியில் தாக்குவதும் அவருடைய அடிப்படை வாழ்வுரிமையை பரிக்கும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இஸ்லாமிய மக்கள் இன்று தெரிந்து கொள்ள வேண்டும் நம்முடைய உண்மையான நண்பர்கள் யார் என்று முதல்வர் பல்லாண்டு வாழ தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post ஒன்றிய அரசின் வக்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம்; சிறுபான்மை மக்களின் உண்மையான நண்பர் என்பதை முதல்வர் நிரூபித்து விட்டார் appeared first on Dinakaran.