துறையூர், மார்ச் 27: துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி சுயநிதிப்பிரிவில் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரித் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி குழு உறுப்பினர் மாலாசுப்பிரமணியன், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மைய இயக்குனர் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தர்கள். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் திருச்சி ஹலோ எஃப் எம் டைரி சகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் மாணவர்கள் வெற்றியாளராகத் திகழ வேண்டுமெனில் நமக்குப் பின்னால் பேசுவதை செவிமடுக்கக் கூடாது. சரியோ தவறோ கூச்சமில்லாது மேடையேறிப் பேசுவதை மேற்கொள்ள வேண்டும். எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 10 கட்டளைகளை சுட்டிக்காட்டி அதன் வழி நடந்தோமேயானால் வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்பதையும் மேற்கோள் காட்டி பேசினார். முடிவில் வணிகவியல் துறை இயக்குனர் முனைவர் மதிவாணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவர் பிரபாகரன் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரகாஷ் தொகுத்து வழங்கினர். விழாவில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி ஆண்டுவிழா appeared first on Dinakaran.