மேட்டுப்பாளையம்,மார்ச்27: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.குறிப்பாக கோவையின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதனிடைய கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர்,மோர் பந்தல்களை திறந்து வழங்க தமிழக முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.
அதன் ஒருபகுதியாக நேற்று காரமடை அருகே உள்ள தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் திமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டது.தொடர்ந்து இந்த பந்தல் மூலமாக நீர் மோர்,கம்மங்கூழ், தர்பூசணி உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக கோவை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் மனோகரன்,முன்னாள் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட பிரதிநிதிகள் ஆண்டவர் முருகேசன், சி.வி.துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக சார்பில் தென் திருப்பதியில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.