சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோவில் கைது

ஈரோடு, மார்ச் 27: சிறுமிக்கு பீடா வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உக்கரம் மில்மேட்டை சேர்ந்த நாகராஜ் மகன் கிருஷ்ணன் (எ) கிருஷ்ணா (22). கூலி தொழிலாளி. திருமணம் ஆனவர். இவர், 15 வயது சிறுமியை கடைக்கு அழைத்து சென்று, ஜர்தா பீடா வாங்கி கொடுத்துள்ளார்.

சிறுமி அதை சாப்பிட்ட உடன் தலை சுற்றல் ஏற்பட்டதும், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணன் மீது போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: