கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ்

 

கோவை, மார்ச் 24: கோவை வடவள்ளி அருகே உள்ள விநாயகர் காலனி பகுதியை சேர்ந்தவர் அருண் என்கிற அருண்ஹாசன் (39). இவர் மீது கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரிடம் கஞ்சா விற்பனை செய்ததாக, பல வழக்குகள் உள்ளன. இதனிடையே கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்ததாக வடவள்ளி காவல் துறையினர் அருணை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ள அருண் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வடவள்ளி காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்தார். இதன் பேரில் அருண் மீது ‘மருந்து சரக்கு குற்றவாளி‘ என்ற வகையில் மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அருணுக்கு போலீசார் வழங்கினர்.

The post கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: