சூலூர், மார்ச் 26: சூலூர் தண்ணீர் டேங்க் வீதியில் பொன்விழா கலையரங்கம் மற்றும் விளையாட்டு கூடம் அடங்கிய மைதானம் அமைந்துள்ளது. தினமும் நடைபயிற்சி மற்றும் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி உடற் பயிற்சிமையும் ஆகியவை உள்ளது. இந்த கலையரங்கத்திற்கு சூலூரின் தந்தை என அழைக்கப்படும் பேரூராட்சி தலைவரும் முன்னாள் சூலூர் எம்எல்ஏ பொன்முடியின் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சூரா தங்கவேலு பெயரை சூட்ட வேண்டும் என்று சூலூர் பொங்கல் விழா குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மற்றும் செயல் அலுவலர் சரவணகுமார் ஆகியோரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் இது குறித்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் முடிவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
The post விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் பெயர் சூட்ட பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.