கோவை வனக்கோட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

 

கோவை, மார்ச் 26: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக காட்டு யானைகள் அதிக அளவில் இருப்பதோடு, வலசை வரும் யானைகளும் வந்து செல்கின்றன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான 15 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் அதிகபட்சமாக 2015ம் ஆண்டில் 22 யானைகளும், 2023ம் ஆண்டில் 21 யானைகளும் உயிரிழந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த காட்டு யானைகள் உயிரிழப்பு, கடந்தாண்டில் குறைந்துள்ளது.
2024ம் ஆண்டில் 8 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல கடந்த 2011 முதல் 2024 வரையிலான காலத்தில் காட்டு யானை தாக்கி 185 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கடந்தாண்டில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post கோவை வனக்கோட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 210 காட்டு யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: