சிவகங்கை: சிவகங்கையில் பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி இரவு, ஒரு மர்ம நபர், பயிற்சி பெண் மருத்துவரை பின் தொடர்ந்து வந்து சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து டீன் சத்தியபாமா அளித்த புகாரில், உடனடியாக எஸ்பி ஆசிஸ் ராவத் தலைமையிலான போலீசார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை அருகே ஆவரங்காட்டை சேர்ந்த சந்தோஷை (20) போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த சந்தோஷ், தனியாக நடந்து சென்ற மருத்துவரை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
The post சிவகங்கை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை தாக்கிய போதை வாலிபர் கைது appeared first on Dinakaran.