ஒன்றிய அரசுக்கு தேவையான விவரங்களை காலதாமதம் இல்லாமல் அனுப்பி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: ஒன்றிய அரசுக்கு தேவையான விவரங்களை காலதாமதம் இல்லாமல் அனுப்பி, ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று 96-வது தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 96வது வாரியக் கூட்டம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 3 பெரிய துறைமுகங்களும், அறிவிக்கப்பட்ட 17 சிறு துறைமுகங்களும் உள்ளன. பெரிய துறைமுகங்களான சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

கடலூர், நாகப்பட்டிணம், பாம்பன், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 6 தமிழ்நாடு அரசின் சிறு துறைமுங்களாக உள்ளன. மேலும், தனியார்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு என 11 சிறு துறைமுகங்களை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து சிறுதுறைமுகங்களும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட வாரியத்தின் கீழ் செயல்படுகிறது. நேற்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தின்கீழ், இந்த ஆண்டின் செயல்பாடுகள், அடுத்த ஆண்டின் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் ெதாடர்ந்து வாரியக் கூட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ஒன்றிய அரசுக்கு தேவையான விவரங்களை காலதாமதம் இல்லாமல் அனுப்பி, ஒன்றிய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

The post ஒன்றிய அரசுக்கு தேவையான விவரங்களை காலதாமதம் இல்லாமல் அனுப்பி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: