ஓசூர், டிச.27: இந்திய பொறியாளர்கள் சங்கம் ஓசூர் உள்ளூர் மையம், பிஎம்சி டெக் நிறுவனத்துடன் இணைந்து எரிசக்தி சேமிப்பு தின விழாவை நடத்தினர். பிஎம்சி டெக் கல்வி குழும தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மலர் முன்னிலை வகித்தார். சங்க தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். ஈசியு டெக் சிமுலேஷன் சொலுஷன் இயக்குனர் மற்றும் பிஇஎம்எல் ஏரோஸ்பேஸ் சிஜிெஎம் (ஓய்வு) ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பிஎம்சி டெக் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பேராசிரியர் சுதாகரன், பிஎம்சி டெக் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர், எரிசக்தி சேமிப்பு பற்றி பேசினர். எரிசக்தி சேமிப்பு சிறப்பு விருது பாலனிக்கும், சிறந்த மேன்மை மிக்க பொறியாளர் விருது (எரிசக்தி சிறப்பு) டாக்டர் முருகன் கைலாசம், சிறந்த முதல்வர் விருது – பாலசுப்பிரமணியம், சிறந்த ஆசிரியர் விருது ரேணுகாதேவி, சிறந்த பேராசிரியர் விருது டாக்டர். கார்த்திகேயன், சிறந்த ஆராய்ச்சியாளர் விருது – டாக்டர் பாலமுருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சிவராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். …
பி.எம்.சி டெக் கல்லூரியில் எரிசக்தி சேமிப்பு தினம்
- ஆற்றல் பாதுகாப்பு தினம்
- பி.எம்.சி தொழில்நுட்பக் கல்லூரி
- ஓசூர்
- இந்திய பொறியாளர்கள் சங்கம் ஓசூர் உள்ளூர் மையம்
- பிஎம்சி டெக்
- பிஎம்சி தொழில்நுட்ப கல்வி குழு
- ஜனாதிபதி
- குமார்
- மலார்
