ஓசூரில் சிஐடியூ சார்பில் மறியல் போராட்டம்

ஓசூர், டிச.24: ஓசூர் காந்தி சிலை அருகில், தொழிலாளர் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி, ஒன்றிய அரசை கண்டித்து, நேற்று சிஐடியூ சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 165 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டில் தொழிலாளர்களை பாதுகாக்கும் 44 சட்டங்களை, தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக 4 தொகுப்புகளாக மாற்றிய ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்து, 44 தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக்கோரியும், ஓசூர் காந்தி சிலை அருகில் சிஐடியூ சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள், செயலாளர் தர், பொருளாளர் தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் துணைத்தலைவர்கள் வாசுதேவன், பி.ஜி.மூர்த்தி, குருநாதன், துணை செயலாளர்கள் பிரபாகரன், சீனிவாசன், குணசேகரன், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் டி.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மகாலிங்கம், மாநகர செயலாளர், மாநகர செயலாளர் நாகேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 165 பேரை கைது செய்தனர். பின்னர், மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

Related Stories: