2024ம் ஆண்டு முதல் மதவழி சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிகாரம் அளிக்கப்பெற்ற குழுவின் 7வது கூட்டத்தில் 160 கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த துறை மூலம் இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 246 நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ் வழங்க ஒப்புதல்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.