ஜல்லிக்கட்டில் பரிசுகளை அள்ளிக்குவித்த பெரியகருப்பன் காளை உயிரிழப்பு: ஈச்சம்பட்டி கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

சமயபுரம்: திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த ஈச்சம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆல்பர்ட்(34). இவர் 10க்கும் மேற்பட்ட நாட்டுவகை மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் 4 ஜல்லிக்கட்டு காளைகளும் அடங்கும். 8 ஆண்டுகளாக வளர்த்து வந்த பெரிய கருப்பன் என்ற ஜல்லிக்கட்டு காளைக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வீரர்களை துவம்சம் செய்ததுடன் பரிசுகளை பெரியகருப்பன் குவித்து வந்தது.

ஜல்லிக்கட்டில் பெருய கருப்பன் காளை களமிறங்குவதை பார்ப்பதற்காகவே தனிக்கூட்டம் உள்ளது. இந்நிலையில் பெரிய கருப்பன் காளைக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காளை இறந்தது. இதையடுத்து காளையின் உடல் இறுதிச்சடங்கு செய்து இன்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் அப்பகுதி மக்கள், மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

The post ஜல்லிக்கட்டில் பரிசுகளை அள்ளிக்குவித்த பெரியகருப்பன் காளை உயிரிழப்பு: ஈச்சம்பட்டி கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: