தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவரங்கள்;

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.சுஜாதாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் துணை ஆணையர் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உளவுத்துறை பிரிவு-1 துணை ஆணையராக சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக மேகலினா ஐடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை நலப் பிரிவு துணை ஆணையராக ஹரி கிரண் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையின் சிபி-சிஐடி காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக ஜி.ஜவகர் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: