இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பாலன் நகர் அடுத்த பள்ளத்திவயலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். அதேபோல் திருச்சியில் நடைபெறும் பொங்கல் விழாவிலும் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

இதற்காக அமித்ஷா அந்தமான் தலைநகர் போர்ட்பிளேர் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று மதியம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பள்ளத்திவயலுக்கு செல்கிறார். பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டருக்கு வந்து தங்குகிறார்.

நாளை (5ம் தேதி) காலை 9.50 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு காரில் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஓட்டலுக்கு காலை 10.40 மணிக்கு வருகிறார். அங்கு ஒரு மணி நேரம் ஓய்வுக்கு பின், காரில் சென்று மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பிற்பகல் 12 மணியளவில் நடைபெறும் பொங்கல் விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்.

பின்னர் அங்கிருந்து மதியம் 1.05 மணியளவில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் ெடல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
புதுக்கோட்டைக்கு அமித்ஷா வருகையையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: