தஞ்சையில் வைக்கப்பட்டுள்ள திமுக மூத்த நிர்வாகி எல் கணேசன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: மொழிப்போர்க் களத்தில், மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல்.கணேசன்
மறைவெய்தியதையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

சட்டமன்றம் – சட்டமேலவை – நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கலைஞரின் பாசத்தைப் பெற்ற ‘எல்.ஜி.’, 1989-இல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார்.

நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன்; அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி பொங்கப் பெருமையோடு சொல்வார். திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார் என முதல்வர் கூறினார்.

Related Stories: