தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் : மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கமுடியும் என ஒன்றிய அரசு கூறுவது அநீதியானது. இருமொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ : மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தருவோம் என ஒன்றிய அரசு கூறுவது சர்வாதிகாரம். தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதற்கு காரணம் இருமொழிக் கொள்கைதான்.
பாமக உறுப்பினர் ஜி.கே.மணி : தாய் மொழியை விட உயர்ந்த கொள்கை எதுவும் இருக்க முடியாது. இந்தியாவில் ஆட்சி மொழியாகத் தமிழ் வர வேண்டும். மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை என பாமக சார்பில் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக உறுப்பினர் எழிலன் : தமிழ்நாடு இரு மொழி கொள்கையின் நாடு. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தி பெயர் வைக்கப்படுகிறது, நாம் ஒரு ‘ரூ’ போட்டதற்கு ருத்ரதாண்டவம் ஆடுகின்றனர். கல்வி நிதி வழங்க மாட்டோம் என்று கூறுவது எந்த வகையில் ஏற்படையது?.
விசிக உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ்: மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு திணிக்க முயல்வது இந்தியைத்தான். தமிழ்நாட்டின் உரிமையை புரிந்து கொண்டு ஒன்றிய அரசு உடனே கல்வி நிதியை அளிக்க ‘வேண்டும். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் இந்தி, சமஸ்கிருதம் மொழிக்குதான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ம.ம.க.உறுப்பினர் அப்துல் சமது : இரு மொழிக் கொள்கையால் தமிழ்நாடு வளர்ந்து நிற்கிறது; தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகிறது பாஜக அரசு. மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்குவோம் என ஒன்றிய அரசு கூறுவது ஆணவத்தின் உச்சம்.
The post மும்மொழி கொள்கை திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் appeared first on Dinakaran.