கடந்த 3 நாட்களாக ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்து வந்த நிலையில், நேற்று அப்பகுதியில் சென்ற வாகனங்களை தாக்க முயன்றது. அதேபோல் இரண்டாவது நாளாக இன்றும் கல்லட்டி மலைப்பாதையில் ஊட்டிக்கு சென்ற வாகனத்தை துரத்தியது. சுதாரித்துக்கொண்ட கார் ஓட்டுநர் மீண்டும் மசினகுடிக்கு திரும்பி சென்றதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சுமார் 500மீட்டர் தொலைவிற்கு காட்டு யானை காரை துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது. உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதனால் தான் யானைகள் மலைப்பாதைக்கு வருகின்றன எனவும் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் சென்று வர வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
The post கல்லட்டி மலைப்பாதையில் காரை துரத்திய காட்டு யானை! appeared first on Dinakaran.