புதுடெல்லி: 12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் தேர்வுகளில் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதி அளிப்பது குறித்து சிபிஎஸ்இ ஆய்வு செய்து வருகிறது. சிபிஎஸ்இ நடத்தும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தற்போது சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் மட்டுமே கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் (அக்கவுன்டன்சி) மாணவர்கள் கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதி அளிப்பது குறித்து சிபிஎஸ்இ ஆய்வு செய்து வருகிறது. இது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் சதவீத கணக்கீடுகள் போன்ற வழக்கமான கணக்கீடுகளுக்கு தேவையான செயல்முறைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க குழு ஒன்று அமைக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
The post 12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி: சிபிஎஸ்இ ஆய்வு appeared first on Dinakaran.