ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த டாக்டர் கணேசன், கோதை நாச்சியாபுரம் கிராமத்தில் உள்ள 4 ஏக்கர் நிலத்தையும், சேத்தூர் மலையடிவார பகுதியில் உள்ள சுமார் 37.75 ஏக்கர் நிலத்தையும் நித்யானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கினார். பின்னர் நிலத்தை மீட்க அவர் தொடர்ந்த வழக்கில், நித்யானந்தாவின் ஆசிரமம் செயல்படக்கூடாது, அங்கு ஆசிரமம் கட்டி வாழ்ந்து வரும் சிஷ்யைகள் வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிஷ்யைகளை போலீசார் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீனில் வந்த சிஷ்யைகள் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஆசிரமங்களுக்கு சென்றனர். அங்கு சீல் வைக்கப்பட்ட பூட்டுகளை உடைத்து உள்ளே வசிக்க தொடங்கினர். தகவல் அறிந்த தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் போலீசார் நேற்று ஆசிரமங்களுக்கு சென்று சிஷ்யைகனை எச்சரித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி மீண்டும் கதவுகளை பூட்டி சீல் வைத்தனர்.
The post ஆசிரம கதவுகளை உடைத்த நித்யானந்தா சிஷ்யைகள் appeared first on Dinakaran.