இது தொடர்பாக அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 20ம் தேதி புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதும், தவறான தகவலை முகநூலில் பதிவிட்டு இரு மதத்தினருக்கிடையே ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாக காரணமாக இருந்ததும் தெரியவந்தது. தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் சரவணகார்த்தியை (43) சென்னையில் கைது செய்து நேற்று தஞ்சாவூர் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post முகநூலில் தவறான தகவலை பரப்பியதாக விஎச்பி மாநில அமைப்பாளர் சென்னையில் கைது appeared first on Dinakaran.