லால்குடி, மார்ச் 24: லால்குடி அருகே ஒரத்தூர் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிகள் எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் பணிகளை துவங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் வடக்கு தெருவில் வடிகால் சேதமடைந்ததால் அப்பகுதியில் புதிய வடிவால் அமைக்க வேண்டும் என லால்குடி செளந்தரபாண்டியன் எம்எல்ஏ விடம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிில் கிராம முக்கிய பிரமுகர்கள் செந்தாமரைகண்ணண், சேகர் அருணாச்சலம், தங்கவேல், தர்மராஜ், செந்தில்குமார் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
The post ஒரத்தூர் ஊராட்சியில் ரூ.13 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி appeared first on Dinakaran.