இந்த வழக்கை மதுரை சிபிஐ கோர்ட் விசாரித்து இருவரையும் விடுதலை செய்து 2018ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘‘லஞ்சம் பெறுபவர்களின் குடும்பத்தினரும் லஞ்சத்தால் பாதிக்கப்படுவர். லஞ்சம் மனிதனை குருடனாக்குகிறது. அப்பாவி மக்களின் நியாயமான காரணத்தை நாசமாக்குகிறது.
இந்த வழக்கில் கணவன், மனைவி ஆகிய 2 பேர் மீதான குற்றச்சாட்டை சிபிஐ நிரூபித்து உள்ளது. எனவே இருவரையும் விடுதலை செய்து மதுரை சிபிஐ கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கோவிந்தசாமி, அவரது மனைவி கீதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், முறையே ரூ.75 ஆயிரம், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. கோவிந்தசாமி கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பதிவு செய்துள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க கீதாவை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் இருவருக்கும் மதுரை சிறை கண்காணிப்பாளர் ஏப்ரல் 10ம் தேதி வரை பரோல் வழங்க வேண்டும். பரோல் முடிந்தவுடன் இருவரும் 10ம் தேதி மாலை சிறையில் சரண் அடைய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு திருச்சி கலால்துறை அதிகாரி மனைவிக்கு 4 ஆண்டு சிறை: லஞ்சம் மனிதனை குருடனாக்குகிறது என ஐகோர்ட் கிளை காட்டம் appeared first on Dinakaran.