வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான ராட்டினம் ரூ.3.06 கோடிக்கு ஏலம்

தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான ராட்டினம் ரூ.3.06 கோடிக்கு ஏலம் போனது. கோயில் சித்திரை திருவிழா வரும் மே 6 முதல் 13ம் தேதி வரை இரவு, பகலாக நடைபெற உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் அமைப்பதற்கான பொது ஏலம் அறநிலையத்துறை சார்பில் நடந்தது. வீரபாண்டி ராட்டினத்தை தேனியைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் ரூ.3.06 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். வீரபாண்டி கோயில் ராட்டினம் கடந்த ஆண்டு ரூ.2.55 கோடிக்கு ஏலம் போனது.

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற உள்ள நிலையில் ராட்டினம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்தாண்டை விட ரூ.51 லட்சம் கூடுதல் தொகை கொடுத்து ராட்டினம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது .

தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில். இக்கோவில் திருவிழா உலக புகழ் பெற்றதாகும். இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 7 நாட்கள் வரை இரவும் பகலாகவும், மிக சிறப்பாக நடைபெறும்.

இந்த கோவிலுக்கு பக்தர்கள் காவடி, அக்னி சட்டி, பூ மிதித்தல் போன்ற வழிகளில் அம்மனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு கௌமாரி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு சித்திரை திருவிழாவில் ராட்டினங்களுடன் கூடிய பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க ரூ.3.06 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

The post வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான ராட்டினம் ரூ.3.06 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: