திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10வது தெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற காட்டு ராஜா(48), அதிமுக பிரமுகர். இவர், மணலூர்பேட்டை சாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை டவுன் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக புல்லட்டில் சென்ற ராஜா என்கிற காட்டு ராஜாவை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அவரது புல்லட்டில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட புல்லட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜாவை கைது செய்தனர். சமீபத்தில் அவரது பிறந்த நாள் விழாவில், பட்டா கத்தியால் கேக் வெட்டி சமூக வலைதளங்களில் படத்தை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தற்போது கஞ்சா கடத்தலில் கைதாகி உள்ளார்.
The post கஞ்சா விற்ற அதிமுக பிரமுகர் அதிரடி கைது appeared first on Dinakaran.