அதன்படி, தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்; (ரயில் எண்; 06037) தாம்பரத்தில் இருந்து மார்ச் 28ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு மார்ச் 31ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வரும். இவை தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயில்: தாம்பரம் – திருச்சி இடையே, மார்ச் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்று சேரும். அதேபோல மறுமார்க்கத்தில் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் இந்த ரயில் திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 12.30 மணிக்கு வந்து சேரும். இவை தஞ்சை, பாநபாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பத்தூர், புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல் மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
சென்னை-பெங்களூரு: மார்ச் 28ம் தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்: 07319), அதேநாளில் பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். சென்னை சென்ட்ரலில் இருந்து அதே நாளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் கே.எஸ்.ஆர் பெங்களூரு, யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்கராபேட், ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.
The post தாம்பரம், சென்னையில் இருந்து கன்னியாகுமரி, பெங்களூருக்கு ரம்ஜான் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.