விமானம் தாமதம் எதிரொலி; ஏர் இந்தியாவை விளாசிய எம்பி சுப்ரியா சுலே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், பாராமதி தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்பி சுப்ரியா சுலே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நான் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தேன். அது ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் தாமதம் ஆனது. விமான தாமதங்கள் தொடர்கதையாக உள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் பிரீமியம் கட்டணங்களை செலுத்துகிறோம்.

ஆனால் விமானங்கள் ஒருபோதும் சரியான நேரத்தில் செல்வதில்லை. தொழில் வல்லுநர்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் இந்த தொடர்ச்சியான தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவில் விமான போக்குவரத்த துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். . பயணிகளுக்கு சிறந்த சேவை தரத்தை உறுதி செய்வதற்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

The post விமானம் தாமதம் எதிரொலி; ஏர் இந்தியாவை விளாசிய எம்பி சுப்ரியா சுலே appeared first on Dinakaran.

Related Stories: