இதுகுறித்து சலீம்ராஜா, அவருடைய மகன் பெரோசிடம் தெரிவித்தார். பின்னர் பெரோஷ், அவரது நண்பர்களான உதயா, சதீஷ், தினகரன் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மூவரும் ரூ.30 லட்சத்தை சலீம்ராஜா மூலமாக சுந்தரவரதனிடம் கொடுத்தனர். ஆனால் அவர் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதுதொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் தினகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து ரியல் எஸ்டேட் புரோக்கர்களான சுந்தரவரதன், சென்னை அசோக் நகரை சேர்ந்த ராமானுஜம்(48), கோவை சந்தானம் (48) மற்றும் சலீம்ராஜா ஆகியோரை சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
இவர்கள் மூவரையும் முதலியார்பேட்டை போலீசார் விசாரணைக்காக 5 நாள் காவலில் எடுத்துள்ளனர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்ட அதிமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் நல்லமுத்து(எ) கண்ணன்(40) இதில் புரோக்கராக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார் திண்டுக்கலுக்கு சென்று நல்லமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்து புதுவை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post மதிப்பிழப்பு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற புரோக்கராக செயல்பட்ட அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.