2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

புதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் திட்ட தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என்ன? அவற்றை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்விகள் வருமாறு:

2019ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அது முடிவடைய எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன? இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த பட்ஜெட் விவரங்கள்? எந்தவொரு நிதி வழங்குதலில் தாமதங்கள் உள்ளனவா? அவ்வாறு இருந்தால், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

எய்ம்ஸ் திட்ட தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என்ன? மேலும் தாமதங்களை தவிர்க்க என்ன முன்னெச்சரிக்கை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஒன்றிய அரசு முறையாக தகவல் வழங்கியுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.

The post 2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: