அரசியல் தலைவர்கள் பற்றி மோசமாக கருத்து தெரிவித்த Grok Al: ஒன்றிய அரசு விசாரணையை தொடங்கியுள்ளதாகத் தகவல்!

டெல்லி: சமூக வலைத்தளத்தில் சட்டவிரோத தணிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுவதாக எக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் குறித்து Grok Al தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. உலகின் பெரும் பணக்காரரான எலன் மாஸ்க்கு சொந்தமான சமூக ஊடக நிறுவனமான எக்ஸ், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக ஆன்லைனில் கருத்து பரிமாற்றத்தை ஒன்றிய அரசு தடை செய்வதாக குற்றச்சாட்டியுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 68ஏ மீறி இணையத்தள உள்ளடக்கத்தை தடுக்க ஐடி சட்டத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்றும் புகார் தெரிவித்துள்ளது.

இதனிடையே எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பான Grok Al, மொழிகளின் ஒலிகளையும் அதன் நுணுக்கங்களையும் சொற்களின் பொருளையும் புரிந்து கொண்டு மனிதர்கள் பேசும் பாணியிலேயே மொழியை கையாளுவதாக பலரும் புகழ்ந்தனர். இந்நிலையில், பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டவர்களை பற்றி மிக மோசமான கருத்துக்களை இந்தி மொழியில் Grok Al தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை, எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அரசியல் தலைவர்கள் பற்றி மோசமாக கருத்து தெரிவித்த Grok Al: ஒன்றிய அரசு விசாரணையை தொடங்கியுள்ளதாகத் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: