இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உடுப்பான் குளத்தை சேர்ந்த பொன்னுசாமி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிதாஸ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தார். மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தண்டனை பெற்றவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தங்கள் தூக்கு தண்டனையை குறைக்க கோரி மனுதாக்கல் செய்திருந்தனர், இந்த மனு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற உத்தரவின் படி தூக்கு தண்டனையை விதிப்பதற்கு உண்டான குற்றங்களில் உள்ள முகாந்தரங்கள் இதில் இல்லை எனவே இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது என உத்தரவிடப்பட்டது.
The post சங்கரன்கோவில் அருகே 3 பேர் கொலை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.