ஈரோடு: ஈரோடு அருகே நேற்று ரவுடி ஜான் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் ஜான் என்ற சாணக்யா (35). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ரவுடி ஜான் மீது சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்திருந்தனர். இதில் நிபந்தனை ஜாமீன் பெற்று, சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு வந்தார்.
நேற்று காலை அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஜான் கையெழுத்து போட்டுவிட்டு, மனைவியான வழக்கறிஞர் சரண்யாவுடன் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் நசியனூர் முள்ளம்பட்டி அருகே சென்றபோது, ஜான் காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் ஒரு கும்பல் அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜானை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, ஜானை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து அவர்கள் வந்த காரிலேயே தப்பித்து சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மற்றொரு காரில் தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், மேலும் 5 பேரை பிடித்து விசாரணை வருகின்றனர். பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகியோரிடம் சித்தோடு போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post ஈரோடு அருகே ரவுடி ஜான் வெட்டிக் கொலை: இதுவரை 9 பேர் கைது; போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.