அக்கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களை தேர்வு செய்த 186 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு பொது நூலகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 24 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 7 பணிநாடுநர்களுக்கும் ஆக மொத்தம் 217 பணிநாடுநர்களுக்கு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அரசு சிறப்பு செயலர் ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு பொது நூலகத் துறை இயக்குநர் சங்கர், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலர் குப்புசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பள்ளிக் கல்வித் துறையில் 217 பேருக்கு நியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.
