சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உறவினர்கள் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு

சென்னை: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், 78வது சுதந்திர தின உரையின்போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் முனைவாராக உருவாக்கிட முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும்.

கடன் தொகையில் 30% மூலதன மானியம், 3% வட்டி மானியமும் வழங்கப்படும், 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரரின் விதவையர், ராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும், முன்னாள் படை வீரர்களின் திருமணமாகாத மகள், முன்னாள் படைவீரரை சார்ந்த விதவை மற்றும் விவாகரத்து பெற்ற மகள் என்ற அறிவிப்பில் தற்போது வயது 55 என்பதிலிருந்து தளர்வு வழங்கி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட மகன் என்பதிலிருந்து தளர்வு வழங்கி முன்னாள் படைவீரருடன் மகன் இணைந்து கடன் பெறலாம்.

எனவே, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக கடன் பெற்று தொழில் முனைவோராக விரும்பும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரரின் விதவையர், ராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும், முன்னாள் படைவீரர்களை சார்ந்துள்ள திருமணமாகாத மகள், விதவையர் மகள் மற்றும் விவாகரத்தான மகள் ஆகியோர் exweichn@tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை நேரில் அணுகி அல்லது தொலைபேசி வாயிலாக 044-2235 0780 தொடர்பு கொண்ட பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உறவினர்கள் காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: