தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நாதம் கீதம் பப்ளிகேசன் செயலாளர் எஸ்.கே.முருகன் முன்னிலை வகித்தார். நிறைவு விழாவில் கலெக்டர் மு.பிரதாப் பேசுகையில், இந்த புத்தகத் திருவிழாவில் ரூ.52 லட்சம் மதிப்பிலான வரலாறு, இலக்கிய, சிறுவர்களுக்கான புத்தகம் போன்ற பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புத்தக அரங்கிற்கு வந்து பயனடைந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கான வாசகர்கள் புத்தக அரங்கிற்கு வருகை புரிந்துள்ளனர் என்றார்.
மேலும், தினந்தோறும் சிந்தனை அரங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக எழுத்தாளர் செங்கதிர் சண்முகம் மாவட்ட நிர்வாகம் சார்பாக கவுரவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் கவிஞர் வைரமுத்துவை கலெக்டர் மு.பிரதாப் கவுரவித்து சிறப்பு செய்தார். பின்னர், கவிஞர் வைரமுத்துவின் எழுத்துகள் மற்றும் சிந்தனைகள் கடைக்கோடி கிராமத்திற்கும் செல்லும் வகையில் கிராமப்புற நூலகங்கள், பள்ளி நூலகங்கள் மற்றும் பள்ளி விடுதிகளில் உள்ள நூலகங்களுக்கு கவிஞர் வைரமுத்து புத்தகங்களை வழங்கினார். அதன் பொருட்டு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர்கள் விடுதி, அமிர்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆண்டார்குப்பம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் நூலகத்திற்கு அவரது புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், செயற் பொறியாளர் வ.ராஜவேல், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வ இளவரசி, வேளாண்மை இணை இயக்குனர் கலாராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண்ண ராஜவேல், கலெக்டர் அலுவலக மேலாளர்கள் (பொது) சங்கிலி ரதி, (குற்றவியல்) செல்வம், வட்டாட்சியர்கள் திருவள்ளூர் ரஜினிகாந்த், பூந்தமல்லி சரஸ்வதி, தனி வட்டாட்சியர் (நிலம்) கோவிந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்; திருவள்ளூர் 4வது புத்தக திருவிழா நிறைவடைந்தது: ரூ.52 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை appeared first on Dinakaran.
