செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

புழல்: சென்னையில் இருந்து இரும்பு குழாய்கள் ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை லாரி ஒன்று திருத்தணி நோக்கி சென்றுகொண்டிருந்தது. செங்குன்றம் ஜிஎன்டி சாலையில், செங்குன்றம் மார்க்கெட் அருகே சென்றபோது, லாரியின் முன்பக்க டயர் திடீரென கழன்று விழுந்ததால், சாலையின் நடுவே இருந்த மையப்பகுதியில் வலது பக்கம் இருந்த சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த, விபத்தின் காரணமாக லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

தகவல் அறிந்ததும் சம்பவ விரைந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த லாரியை இயந்திரங்கள் மூலமாக அப்புறப்படுத்தினர். இதுகுறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம், அதிகாலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதில், லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: