மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் பலவிதமான உதவித்திட்டங்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்தான தெருமுனை நாடகங்கள் மற்றும் சாலை விளக்க நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் மு.பிரதாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்தும் அவர்களது உரிமைகள் குறித்தும் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்தார். பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், மூட நீக்கியல் வல்லுநர் பிரீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிலத்திற்கான ஆணை :

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 672 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நிலவுடமைத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான நிலத்திற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும் கலெக்டர் மு.பிரதாப் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வெங்கட்ராமன், (நிலம்) செல்வமதி, தனித்துணை கலெக்டர் (சபாதி) பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், தீபா, தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அரிஷ் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாளர் சீனிவாசன், தாட்கோ பொது மேலாளர் சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: