இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காரைக்கால் அம்மையாரை தரிசித்தனர். விழாவில் 2ம் நாளான நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார். திருக்கோயில் முழுவதும் மங்கள இசை வாத்தியமும், கயிலை வாத்தியம் முழக்கம் ஒலித்தது. பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 2 நாள் நடைபெற்ற இந்த விழா நேற்று முன்தினமுடன் நிறைவு பெற்றது. திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி மேற்பார்வையில் அருளாளர் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
The post திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா நிறைவு appeared first on Dinakaran.
